ஜம்மு காஷ்மீர்: ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 5 வீரர்கள் உயிரிழப்பு
5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. மெந்தரின் பால்னோய் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சுமார் 350 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story