ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

File image
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்தி என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், இரு தரப்புக்கும் இடையே நேற்று இரவு முதல் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.