வங்கதேச ஊடுருவல்காரர்கள்.. உளவுத்துறை கூறியது என்ன..? சோரன் அரசு மீது ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு


வங்கதேச ஊடுருவல்காரர்கள்.. உளவுத்துறை கூறியது என்ன..? சோரன் அரசு மீது ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு
x

ஊடுருவல்காரர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து அவர்களின் நிலத்தை அபகரித்ததாக ஜே.பி. நட்டா கூறினார்.

பொகாரோ:

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரம் மேற்கொண்டார். கோமியா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியபோது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:-

உளவுத்துறையின் ஒரு அறிக்கை எனக்கு இப்போது கிடைத்துள்ளது. வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு இங்குள்ள மதரசாக்களில் தங்குமிடம் வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, எரிவாயு இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை எளிதாக்கப்படுகின்றன. பின்னர் ஹேமந்த் சோரன் அரசாங்கம் அவர்களுக்கு நிலத்தை உறுதி செய்கிறது.

ஜார்க்கண்டில் ஊடுருவல் தலைவிரித்தாடுகிறது. ஊடுருவல்காரர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து அவர்களின் நிலத்தை அபகரிக்கின்றனர். அந்த நிலங்களை திரும்பப் பெற நாங்கள் சட்டம் கொண்டு வருவோம். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசால் மட்டுமே ஊடுருவலை தடுக்க முடியும்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியானது ஊழல் தலைவர்களின் குடும்பம். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன் மீண்டும் சிறைக்கு செல்லவுள்ளார். அவர் ரூ.5,000 கோடி சுரங்க ஊழல், ரூ.236 கோடி நில ஊழல் மற்றும் பல ஊழல்களில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story