இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்


இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 20 Nov 2024 12:56 AM IST (Updated: 20 Nov 2024 1:38 PM IST)
t-max-icont-min-icon

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது.

இந்நிலையில், டெல்லி அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.


Next Story