இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்; ஜனாதிபதி முர்மு


இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்; ஜனாதிபதி முர்மு
x

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.

டெல்லி,

இலங்கையின் அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை சென்ற அதிபர் அநுர குமார திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்வுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்' என்று இலங்கை அதிபர் திசநாயகவிடம் ஜனாதிபதி முர்மு உறுதியளித்தார்.

மேலும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இந்தியாவுக்கு இலங்கை மிகவும் முக்கிய நாடாக உள்ளது' என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.


Next Story