இந்தியா 2029-ம் ஆண்டிற்குள் உலகில் 3-வது பெரிய பொருளாதார நாடாகும்: அரியானா முதல்-மந்திரி

2029-ம் ஆண்டிற்குள் இந்தியாவானது உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாகும் என அரியானா முதல்-மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் கராவர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி நயப் சிங் சைனி கலந்து கொண்டார். இதன்பின்னர், திரண்டிருந்த கூட்டத்தின் முன் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இந்தியா உருவாவதில் வெற்றி காணும். 2029-ம் ஆண்டிற்குள் இந்தியா உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாகவும் உருவெடுக்கும் என தெரிவித்து உள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கான நான்கு தூண்களாக உள்ள ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு அதிகாரமளித்தலில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






