ஆபரேஷன் சிந்தூரின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம்; ராஜ்நாத் சிங்

பஹல்காமில் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குளாக்கியது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
டெல்லி,
1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம். நமது குழுவின் ஒருங்கிணைப்பு மற்றும் வீரம் சேர்ந்து வெற்றி என்பது நமது எதிர்பார்ப்பல்ல வெற்றி நமது வழக்கம் என்றாகிவிட்டது. வெற்றி என்ற வழக்கத்தை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பஹல்காம் தாக்குதல் குறிந்த எண்ணம் எழும்போது நமது இயதம் கடினமாகிவிடுகிறது. பஹல்காமில் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குளாக்கியது. ஆனால், அந்த நிகழ்வு நமது மன வலிமையை உடைத்துவிடாது. பயங்கரவாதிகள் கனவிலும் நினைக்காத பாடத்தை புகட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதிபூண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.






