இந்தியா - கம்போடியா கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்


இந்தியா - கம்போடியா  கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2024 9:12 PM IST (Updated: 1 Dec 2024 9:14 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - கம்போடியா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி இன்று(01.12.2024) தொடங்கியது.

புனே,

இந்தியா - கம்போடியா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கியது.

இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியா-கம்போடியா இடையிலான கூட்டு டேபிள்டாப் ராணுவப் பயிற்சி மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில்( Foreign Training Node) இன்று(01.12.2024) தொடங்கியது.இந்த கூட்டு ராணுவ பயிற்சி டிசம்பர் 1-ம் தேதி முதல் 8 தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்திய ராணுவ படையை சேர்ந்த 20 வீரர்கள்-கம்போடியா ராணுவ படையை சேர்ந்த 20 வீரர்கள் ராணுவ போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ளனர்.

இப்பயிற்சி மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு ராணுவ பயிற்சி ஒத்திகைக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இந்த பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. அடிப்படையிலான பயிற்சியின் அம்சங்களை வெளிக்கொணர்தல் மற்றும் சூழ்நிலை அடிப்படையிலான விவாதங்கள். தந்திரமான போர் பயிற்சிகள் மூலம் மற்றும் நடைமுறைகளை புரிந்துகொள்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனிடையே 'ஆத்மநிர்பர்தா' மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டு திறன்களை ஊக்குவிக்கும். கூட்டு செயல்பாட்டு மையத்தை உருவாக்குதல், புலனாய்வு மற்றும் கண்காணிப்பு மையத்தை நிறுவுதல், ட்ரோன்கள் மற்றும் எதிர் ட்ரோன் அமைப்புகளை பயன்படுத்துதல், தரையிறங்கும் இடத்தைப் பாதுகாத்தல், சட்டவிரோத கட்டமைப்புகளை இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகளில் அடங்கும்.

கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் இரு தரப்பினரும் தங்களது சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள கூட்டு டேபிள்டாப் பயிற்சி உதவும். இந்தப் பயிற்சி இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே பரஸ்பர சுறுசுறுப்பு, நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த உதவும்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story