துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு

Photo Credit: PTI (File)
நாடாளுமன்றத்தில் இப்போது இருக்கும் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதா கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினமா செய்ததால், புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தில் இப்போது இருக்கும் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதா கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
இருப்பினும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் போட்டியின்றி வெற்றி என்ற நிலையை ஆளும் கூட்டணி பெற்றுவிடக்கூடாது என்று இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் கருதுகின்றன. எனவே எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்த வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுறது
Related Tags :
Next Story






