டேங்கர் லாரி வெடித்து சிதறி கோர விபத்து - 7 பேர் பலி

விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் ஹஷிர்பூர் மாவட்டம் மண்டெலா பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் கியாஸ் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது.
ஹஷிர்பூர் - ஜலந்தர் நெடுஞ்சாலையில் மண்டெலா பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே காய்கறி ஏற்றிவந்த லாரி மீது டேங்கர் லாரி மோதியது. இந்த கோர விபத்தில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர்கள், சாலையோரம் நின்றவர்கள் என 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






