காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
x

கோப்புப்படம்

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டு தோறும் காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் விழாவுக்கு முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று (08.02.2025 - சனிக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்/ கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை (15.02.2025) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். மேலும், அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story