விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது


விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
x

மிரட்டல் விடுத்த நபர் யங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

நாட்டின் பல்வேறு முன்னணி விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த 400-க்கும் அதிகமான விமானங்களுக்கு கடந்த 15 நாட்களில் சமூகவலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்தநிலையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள கோண்டியாவை சேர்ந்த ஜக்தீஷ் உய்கே (வயது35) என்பது தெரியவந்தது.

இவர் விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி பிரதமர் அலுவலகம், ரெயில்வே மந்திரி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அலுவலகம் மிரட்டல் இ-மெயில் அனுப்பி உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜக்தீஷ் உய்கே பயங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாகவும், 2021-ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்து உள்ளது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில் தலைமறைவாக இருந்த ஜக்தீஷ் உய்கேயை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


Next Story