குஜராத்: நொறுக்கு தீனி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
ராஜ்கோட்,
'குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள இயங்கிவரும் பிரபல நொறுக்கு தீனி தயாரிப்பு(கோபால் ஸ்நாக்ஸ் லிமிடெட்) நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று(11.12.2024) மதியம் 2:45 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து தீயை கட்டுப்படுத்தவும், அப்பகுதியை பாதுகாக்கவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தற்போது, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.மேலும் தீ விபத்திற்கு வழிவகுத்த காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story