2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய நண்பன்... பணத்தை திருப்பி தராததால் படுகொலை

பணத்தை வாங்கியபோது 7 நாட்களில் கடனை திருப்பி செலுத்திவிடுவதாக மஞ்சுநாத் உறுதியளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் கவுடர்(வயது 30) என்பவர், கடந்த வாரம் தனது நண்பரான தயானந்த் குண்ட்லூர் என்பவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தை வாங்கியபோது 7 நாட்களில் கடனை திருப்பி செலுத்திவிடுவதாக மஞ்சுநாத் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் மஞ்சுநாத் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில், தனது பணத்தை தருமாறு மஞ்சுநாத்திடம் நேற்று இரவு தயானந்த் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தயானந்த், தன்னிடம் இருந்த அரிவாளை எடுத்து மஞ்சுநாத்தை வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மஞ்சுநாத், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, தயானந்த் காவல் நிலையத்தில் சரணடைந்து தனது நண்பனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






