மத்திய பிரதேசத்தில் பைக் கிணற்றில் விழுந்ததில் 4 பேர் பலி
![மத்திய பிரதேசத்தில் பைக் கிணற்றில் விழுந்ததில் 4 பேர் பலி மத்திய பிரதேசத்தில் பைக் கிணற்றில் விழுந்ததில் 4 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38054350-accident1.webp)
கூர்மையான வளைவில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் பைக் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தின் கூர்மையான வளைவில் இருந்த கிணற்றில் பைக் விழுந்ததில் 4 இளைஞர்கள் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத் தலைமையகத்திலிருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தொலைவில் உள்ள சோட்டி உமர்பந்த் மற்றும் முண்ட்லா கிராமங்களுக்கு இடையே நேற்று இரவு 11.50 மணியளவில் ஒரே பைக்கில் சென்ற 4 பேர் கூர்மையான வளைவில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்தனர். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் இருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் சந்தீப் (19), அனுராக் (22), மனிஷ் (20) மற்றும் ரோஹன் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சோட்டி உமர்பந்திலிருந்து முண்ட்லா கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.