புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து விலகல்


புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து விலகல்
x

புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன். இவர் 2017 முதல் 2021 வரை நியமன எம்.எல்.ஏ.வாகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக சாமிநாதன் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும். எனக்கு பதவி அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story