சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் தீ விபத்து


சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் தீ விபத்து
x

சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் வழக்கு விசாரணை அறை எண் 11, 12-க்கு இடையே உள்ள காத்திருப்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தின்போது நீதிபதி பெலா.எம்.திரிவேதி மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் தலைமையில் நடந்த விசாரணை நிறுத்தப்பட்டது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தால் சுப்ரீம் கோரட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story