பஞ்சாப்: துணிக்கடையில் தீ விபத்து


பஞ்சாப்: துணிக்கடையில் தீ விபத்து
x

துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குருகிராம்,

பஞ்சாப் மாநிலம் குருகிராமின் சதார் பஜாரில் உள்ள ஒரு துணிக்கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்து நள்ளிரவில் ஏற்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை என்றும் கடையில் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story