ஜார்கண்டில் என்கவுன்டர்: 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

File image
ஜார்கண்டில் நடந்த என்கவுன்டரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசா பகுதியில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ஜார்கண்ட் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த என்கவுன்டரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்கள் மற்றும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சில மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.