சத்தீஷ்காரின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது; பிரதமர் மோடி பெருமிதம்


சத்தீஷ்காரின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது; பிரதமர் மோடி பெருமிதம்
x

மக்கள் வாழ்வில் ஏற்படும் சிரமங்களை குறைக்க அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது என அவர் கூறினார்

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலமாக உருவானதன் 25வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மாநிலத்தின் நவ ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ரூ. 14 ஆயிரத்து 260 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது,

மக்கள் வாழ்வில் ஏற்படும் சிரமங்களை குறைக்க நமது அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. தற்போது சத்தீஷ்காரின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது. இணைய வசதியும் கிடைத்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் என்பது சாதாரண குடும்பங்களுக்கு கனவு. யாருடைய வீட்டிற்காவது சமையல் எரிவாயு சிலிண்டர் வரும்போது மக்கள் தூரத்தில் இருந்தவாறு நமது வீட்டிற்கு சிலிண்டர் எப்போது வரும் என எதிர்பார்ப்பார்கள். ஆகையால் தான் உஜ்வாலா திட்டத்தின்கீழ் மக்களின் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் கொடுக்கப்படுகிறது. தற்போது சத்தீஷ்காரின் அனைத்து கிராமங்களுக்கும் கியாஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. குழாய் மூலம் குடிநீர் கொடுக்கப்படுவதுபோல் சமையல் கியாசையும் குழாய் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் கொடுக்க முயற்சித்து வருகிறோம்

என்றார்.

1 More update

Next Story