‘பீகாரில் வளர்ச்சி தொடருமா அல்லது காட்டாட்சி திரும்புமா என்பதை தேர்தல் தீர்மானிக்கும்’ - அமித்ஷா


‘பீகாரில் வளர்ச்சி தொடருமா அல்லது காட்டாட்சி திரும்புமா என்பதை தேர்தல் தீர்மானிக்கும்’ - அமித்ஷா
x

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பீகாரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வக்கையில் இன்று நலந்தா, ககாரியா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் பேசியதாவது;-

“சட்டவிரோதமாக குடியேறியவர்களை பீகாரிலேயே இருக்க விடுங்கள் என்று ராகுல் காந்தி கூறுகிறார். நீங்கள் சொல்லுங்கள், அவர்களை இங்கேயே இருக்க விட வேண்டுமா? சட்டவிரோதமாக குடியேறியவர்களை காப்பாற்ற எத்தனை பேரணிகளை நடத்தினாலும், அவர்களை உங்களால் பாதுகாக்க முடியாது என்பதை ராகுல் காந்தியிடம் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் நமது அரசாங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

எதிர்வரும் தேர்தலானது யாரை சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக அல்லது முதல் மந்திரியாக ஆக்க வேண்டும் என்பது பற்றியது அல்ல. பீகாரில் காட்டாட்சி திரும்புமா அல்லது மாநிலம் வளர்ச்சிப் பாதையில் தொடருமா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கும். லாலு-ராப்ரி அரசாங்கம் அமைந்தால், காட்டாட்சி மட்டுமே வரும், அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பீகார் மாநிலம் வளர்ச்சியடைந்து, நாடு முழுவதும் தனது அடையாளத்தை பதிக்கும்.”

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

1 More update

Next Story