டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்


டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்
x
தினத்தந்தி 7 Jan 2025 9:28 AM (Updated: 7 Jan 2025 10:31 AM)
t-max-icont-min-icon

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வேட்பு மனு தாக்கல் தொடக்கம் 10.01.2025

* வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 17.01.2025

* வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18.01.2025

* வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 20.01.2025

ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு டெல்லிஅரசியல் களத்தில் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே காரசார பேச்சுகள், வாக்காளர் பட்டியல் வெளியீடு என அரசியல் களம் களை கட்டியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story