நடுவானில், விமானத்தில் மூதாட்டி உயிரிழப்பு


நடுவானில், விமானத்தில் மூதாட்டி உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 April 2025 3:04 PM IST (Updated: 7 April 2025 4:20 PM IST)
t-max-icont-min-icon

விமானத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு வாரணாசிக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பல விமான பயணிகள் பயணித்திருந்தனர்.

இந்த நிலையில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது மூதாட்டி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த விமானத்தின் பைலட் உடனடியாக விமானத்தை சிக்கல்தானா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினர். தரையிறங்கும் போது மருத்துவக் குழு அந்தப் பெண்ணை பரிசோதித்தது.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சுஷிலா தேவி உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்காக சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story