எகிப்து வெளியுறவுத்துறை மந்திரியின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது
டெல்லி,
எகிப்து வெளியுறவுத்துறை மந்திரி பதிர் அப்தெலாட்டி. இவர் 2 நாட்கள் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வரவிருந்தார். அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், பதிர் அப்தெலாட்டியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் மோதல், மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை போன்றவற்றின் காரணமாக எகிப்து வெளியுறவுத்துறை மந்திரியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பதிர் அப்தெலாட்டியின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் இந்தியா வருவார் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






