தமிழகத்தில் ரூ.1,000 கோடிக்கு சைபர் மோசடி; மேற்கு வங்காளத்தில் அமலாக்கத்துறை சோதனை
தமிழகத்தில் ரூ.1,000 கோடி சைபர் மோசடி தொடர்பாக மேற்கு வங்காளத்தில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தா,
தமிழகத்தில் ரூ.1,000 கோடிக்கு அதிகமான சைபர் மோசடி தொடர்பான வழக்குகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களை சேர்ந்த பலர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் சுமார் 8 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட், சால்ட் லேக் மற்றும் பாகுய்ஹாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து இடங்களிலும், மேலும் மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் அதிகாரிகள் இப்போது பாகுய்ஹாட்டியில் உள்ள உயர்தர குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சோதனை நடத்தி வருகின்றனர் என்றார்.
Related Tags :
Next Story