டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு


டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்:  சிபிஐ விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2024 2:33 AM GMT (Updated: 3 Aug 2024 4:11 AM GMT)

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியின் பழைய ராஜிந்தர்நகர் பகுதியில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 27-ம் தேதி மாலை பெய்த கனமழையால் இந்த பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது. சுமார் 20 மாணவர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் 17 பேர் மட்டுமே உரிய நேரத்தில் மீட்கப்பட்டனர்.

வெள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள், ஒரு மாணவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உரிய நடவடிக்கை கோரி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் உள்ளிட்ட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உயர் நிலை விசாரணை கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.


Next Story