டெல்லி சட்டசபை தேர்தல்; கெஜ்ரிவால், அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி.க்களை நிறுத்தியது பா.ஜ.க.
புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. இதில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தி உள்ளது.
இதேபோன்று கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரி அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது.
கரோல் பாக் மற்றும் ஜனக்புரி தொகுதிகளில் முறையே அக்கட்சியை சேர்ந்த துஷ்யந்த் குமார் கவுதம் மற்றும் ஆஷிஷ் சூட் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
காந்தி நகர் தொகுதியில், அரவிந்தர் சிங் லவ்லியையும், பிஜ்வாசன் தொகுதியில், ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் கைலாஷ் கெலாட்டையும் அக்கட்சி நிறுத்தி உள்ளது. முன்னாள் டெல்லி பா.ஜ.க. தலைவர் சதீஷ் உபாத்யாய், மாளவியா நகரில் இருந்து போட்டியிட உள்ளார்.