டேராடூன்: இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு
இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின்(IMA) 155-வது 'பாசிங் அவுட்' அணிவகுப்பு இன்று நடைபெற்றது. பயிற்சியை நிறைவு செய்த 491 இளம் வீரர்கள் இன்றைய தினம் இந்திய ராணுவத்தில் இணைந்தனர். இதில் 456 வீரர்கள் இந்திய ராணுவத்திலும், 35 வீரர்கள் நேச நாடுகளிலும் பணியாற்ற உள்ளனர்.
இன்று நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் நேபாள ராணுவத்தின் தலைமை தளபதி அசோக் ராஜ் சிக்டெல் கலந்து கொண்டார். பயிற்சி முடித்த வீரர்கள், சீருடைகளை அணிந்து கம்பீரமாக அணிவகுத்து சென்றனர். அவர்கள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அந்த வீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெருமிதத்துடன் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story