திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு விழா வரும் 7-ந்தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் குடமுழுக்கு விழா வரும் 7-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story






