புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு


புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு
x

புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ்சின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசை பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் கட்டணம் உயர்த்தப்படாத நிலையே தொடர்ந்தது.

இந்தநிலையில் புதுவை பகுதிக்குள் இயங்கும் பஸ்களுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே டவுன் பஸ்களில் ரூ.5 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணம் இனி ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் தலா ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. டவுன் பஸ்களில் அதிகபட்சமாக ரூ.13 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு நிதித்துறை ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில் தற்போது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளரான சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.


Next Story