புஷ்பா 2 சிறப்பு காட்சியில் காயமடைந்த சிறுவன் 20 நாட்களுக்கு பின்... தந்தை பேட்டி


புஷ்பா 2 சிறப்பு காட்சியில் காயமடைந்த சிறுவன் 20 நாட்களுக்கு பின்... தந்தை பேட்டி
x

அல்லு அர்ஜுன் மற்றும் தெலுங்கானா அரசு எங்களுக்கு ஆதரவளிக்கிறது என புஷ்பா 2 சிறப்பு காட்சியில் காயமடைந்த சிறுவனின் தந்தை பாஸ்கர் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்தது. இதனை காண்பதற்காக சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். 3 மணி நேரத்திற்கு கூடுதலாக நடந்த அந்த விசாரணையின்போது போலீசாரால் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த சிறுவன் 20 நாட்களுக்கு பின்னர் எதிர்வினையாற்றி உள்ளான். இதுபற்றி சிறுவனின் தந்தை பாஸ்கர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, 20 நாட்களுக்கு பின்பு அவன் எதிர்வினையாற்றி உள்ளான். அல்லு அர்ஜுன் மற்றும் தெலுங்கானா அரசு எங்களுக்கு ஆதரவளிக்கிறது என கூறியுள்ளார்.


Next Story