காஷ்மீரில் குண்டுவெடிப்பு; 3 ராணுவ வீரர்கள் படுகாயம்


காஷ்மீரில் குண்டுவெடிப்பு; 3 ராணுவ வீரர்கள் படுகாயம்
x

காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் அருகே பட்டல் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணிவெடியை பதுக்கி வைத்த பயங்கரவாதிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story