அரியானா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி


அரியானா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி
x

Image Courtesy : @BJP4Haryana

அரியானா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத், ஹிசார், ரோதக், கர்னல், யமுனாநகர், குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய நகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. மேலும் அம்பாலா மற்றும் சோனிபட் மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் அதே நாளில் நடைபெற்றது. பானிபட் நகராட்சி தேர்தல் 9-ந்தேதி நடைபெற்றது. அதே நேரத்தில், 21 நகராட்சி குழுக்களுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மொத்தமாக 41 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 26 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், குருகிராம் மற்றும் ரோதக் உட்பட 10 உள்ளாட்சிகளில் ஆளும் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அரியானாவில் காங்கிரஸ் தொடர்ச்சியாக இரண்டாவது தேர்தல் தோல்வியை சந்தித்துள்ளது.

1 More update

Next Story