மத்திய மந்திரி ஆகிறாரா நிதிஷ் குமார்?


மத்திய மந்திரி ஆகிறாரா நிதிஷ் குமார்?
x
தினத்தந்தி 3 Jun 2024 3:07 PM IST (Updated: 3 Jun 2024 3:09 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி்ஷ்குமார் மத்திய மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், பிரதமர் மோடியை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ்குமார் இன்று மாலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்,பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்க இருப்பதாக பீகார் அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி்ஷ்குமார் மத்திய மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ்குமார் 2 ஆண்டுகளுக்கு முன் கூட்டணியை முறி்த்துக்கொண்டார். பா.ஜனதா கூட்டணியை உதறிவிட்டு ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தார்.

எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் முக்கிய பங்காற்றிய நிதிஷ்குமார் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து வெளியேறினார். இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

பா.ஜனதா ஆதரவில் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் தற்போது முதல்-மந்திரி பதவியை பா.ஜனதாவுக்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் முதல்-மந்திரி பதவியை பா.ஜனதாவுக்கு கொடுத்து விட்டு மத்திய மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story