காங்கிரஸ் வாங்கிய கடனை அடைத்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்


காங்கிரஸ் வாங்கிய கடனை அடைத்து வருகிறோம் -  நிர்மலா சீதாராமன்
x

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 45 சதவீத மக்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதமாக உயரும். ஜிஎஸ்டியின் கீழ் சராசரி வரி 15.8 சதவீதத்திலிருந்து 11.3 சதவீதமாக குறைந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் 6ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை சதவீதம், தற்போது 3.2 ஆக குறைந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிதி அளவு குறைக்கப்படவில்லை.

உலகின் தலைசிறந்த 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 45 சதவீத மக்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய அனைத்து இந்திய குடிமக்களின் வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது.

மன்மோகன் சிங் அரசு எரிபொருள், உரங்கள் மற்றும் உணவு மானியங்களுக்கு வாங்கிய கடனை அடைத்து வருகிறோம். இந்த நிதியாண்டில் ரூ.5946 கோடி வட்டி மற்றும் அடுத்த நிதியாண்டில் ரூ.3544 கோடி வட்டி பழைய கடனுக்காக செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story