கட்டுப்பாட்டை இழந்து பேக்கரிக்குள் புகுந்த ஆட்டோ - வீடியோ

ஆட்டோ பேக்கரி கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அம்பலப்பாறையில் அதிகாலை சாரல் மழை பெய்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், அப்பகுதியில் ஆட்டோ ஒன்று வேகமாக சாலையில் வந்ததுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அருகில் இருந்த பேக்கரி கடைக்கும் நுழைந்தது. பின்னர் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் டிரைவர் ஆட்டோவில் சிக்கிக்கொண்டார்.
அந்த கடையில் இருந்தவர்கள் உடனடியாக ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். இதனால் அட்டோ டிரைவர் காயங்கள் ஏதுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டார். கடையின் முன்பக்கத்தில் மட்டும் சிறிது சேதங்கள் ஏற்பட்டு உள்ளது. ஆட்டோவானது கடைக்கு வெளிப்புரத்திலேயே மோதி கவிழ்ந்ததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
இந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேக்கரி கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.






