ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்


ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
x

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்டத்தின் கிரால்போரா பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 5 கையெறி குண்டுகள், ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story