மணிப்பூர்: பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பறிமுதல் - பாதுகாப்புப்படையினர் நடவடிக்கை
மணிப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், மணிப்பூரில் மேற்கு இம்பால் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அம்மாவட்டத்தின் சஹிசாபி பகுதியில் நடத்திய சோதனையில் துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.