ஆந்திரா: சண்டையே போடாமல் ரூ.1.25 கோடி வென்ற சேவல்


ஆந்திரா: சண்டையே போடாமல் ரூ.1.25 கோடி வென்ற சேவல்
x

ஒரு சேவல் சண்டையே போடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து ரூ.1.25 கோடியை வென்றிருக்கிறது.

அமராவதி,

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடைபெற்றது. இந்த போட்டியில் ஒரு சேவல் களத்தில் நகராமல் நின்ற இடத்திலேயே இருந்து ரூ.1.25 கோடி பரிசு தொகையை வென்றுள்ளது.

ஒரு வட்டத்திற்குள் போட்டியிட்ட 5 சேவல்களில் 4 சேவல்கள் தங்களுக்குள் சண்டையிட்டு தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், சண்டையே போடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த ஒரு சேவலை வெற்றி பெற்றதாக போட்டி நடத்திய குழுவினர் அறிவித்தனர்.


Next Story