வாக்குச்சீட்டு தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் - அகிலேஷ் யாதவ்


வாக்குச்சீட்டு தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் - அகிலேஷ் யாதவ்
x

கோப்புப்படம் 

இந்தியாவில் சிலரது நலனுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கிறது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

லக்னோ,

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை ஜெர்மனியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி. ராகுல்குமார் கம்போஜை சந்தித்தார். பின்னர், கம்போஜுடன் இணைந்து, அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தியாவில் சிலரது நலனுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் என்றால் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்களை யாரும் நம்பவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கூட மனச்சோர்வுடன்தான் இருக்கின்றனர். அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. எனவே, வாக்குச்சீட்டு தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story