மணிப்பூர் கவர்னராக அஜய் குமார் பல்லா பதவியேற்றார்


மணிப்பூர் கவர்னராக அஜய் குமார் பல்லா பதவியேற்றார்
x
தினத்தந்தி 3 Jan 2025 1:26 PM IST (Updated: 3 Jan 2025 5:41 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரின் 19வது கவர்னராக அஜய் குமார் பல்லா பதவியேற்றுக் கொண்டார்.

இம்பால்,

அசாம் கவர்னர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா மணிப்பூரின் கூடுதல் கவர்னர் பொறுப்பை வகித்து வந்தார். இதையடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் அஜய் குமார் பல்லாவை மணிப்பூரின் புதிய கவர்னராக நியமித்தார்.

இந்நிலையில், மணிப்பூரின் 19-வது கவர்னராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா இன்று (ஜன. 3) அம்மாநில கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய உள்துறை செயலராக அதிக காலம் பணியாற்றியவர் என்ற சிறப்பை பெற்றவர் அஜய் குமார் பல்லா. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தார். மேலும், 1984-ல் அசாம்-மேகாலயா கேடரில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

முன்னதாக, நேற்று இம்பாலுக்கு வந்த அஜய் குமார் பல்லாவுக்கு கவர்னர் மாளிகையில் அம்மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் வரவேற்பு அளித்தார்.


Next Story