விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்பு


விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்பு
x

குஜராத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்துக்கு புறப்பட்டது.

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் உள்பட மேலும் சிலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 265 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி இன்று மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற விடுதியின் மேற்கூரையில் இருந்து விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளது. கருப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில் விமான விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story