மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் விரக்தி: மாற்றுத்திறனாளி மகன்களை கொன்று தற்கொலை செய்த நபர்

சுனிலின் மனைவி 2 வாரங்களுக்குமுன் வீட்டை விட்டு வெளியேறினார்.
தாதர் நாகர் ஹவெலி,
டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் தாதர் நாகர் ஹவெலி மாவட்டம் சில்வசா பகுதியை சேர்ந்தவர் சுனில் பஹ்ரே (வயது 56). இவருக்கு திருமணமாகி ஜெய் (வயது 18), ஆர்யா (வயது 10) என 2 மகன்கள் இருந்தனர். 2 மகன்களும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். சுனித் தனது மனைவி, மகன்களுடன் சில்வசா பகுதியில் வசித்து வந்தார்.
இதனிடையே, சுனிலின் மனைவி 2 வாரங்களுக்குமுன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், சுனில் தனது 2 மகன்களை கவனித்து வந்தார்.
இந்நிலையில், மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் விரக்தியடைந்த சுனில் நேற்று மாலை தனது 2 மகன்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






