காஷ்மீரில் தற்செயலாக மிதித்ததில் கண்ணிவெடி வெடித்து ராணுவ வீரர் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று காலை தற்செயலாக ராணுவ வீரர் கண்ணிவெடியை மிதித்துள்ளார்.
பூஞ்ச்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, மெந்தார் பகுதிக்கு உட்பட்ட கிருஷ்ண காடி பிரிவில் நாங்கி-தகேரி பகுதியில் காலை 10.50 மணியளவில் ராணுவ வீரர் ஒருவர் தற்செயலாக கண்ணிவெடியை மிதித்துள்ளார்.
இதில் அந்த கண்ணிவெடி திடீரென வெடித்து உள்ளது. இந்த வெடிவிபத்தில் அந்த வீரர் காயமடைந்து உள்ளார். அவர் உடனடியாக சக வீரர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காஷ்மீரில் ஊடுருவலை ஒழிக்கும் வகையில், கண்ணிவெடி உள்ள நிலப்பகுதிகள் கோடிட்டு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும்.
சில சமயங்களில் மழை பெய்யும்போது, நீரில் அந்த தடம் அழிந்து போய் விடும் சூழலில், இதுபோன்ற வெடிவிபத்துகள் ஏற்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story