ரெயில் தண்டவாளத்தில் குடையை விரித்தபடி படுத்து உறங்கிய நபர்


ரெயில் தண்டவாளத்தில் குடையை விரித்தபடி படுத்து உறங்கிய நபர்
x
தினத்தந்தி 25 Aug 2024 11:15 AM (Updated: 25 Aug 2024 1:46 PM)
t-max-icont-min-icon

தண்டவாளத்தில் படுத்திருந்த நபரால், நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் திடீரென ரெயிலை நடுவழியில் நிறுத்திய லோகோ பைலட் கீழே இறங்கி ரெயில் தண்டவாளத்தின் முன்னே நடந்து சென்றார். பின்னர்தான் தெரிந்தது அந்த ரெயில் தண்டவாளத்தில் குடையுடன் நபர் ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.

ரெயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்ற லோகோ பைலட் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பினார். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ரெயில் தூரத்தில் வரும்போதே தண்டவாளத்தில் ஏதோ இருப்பதைக் கண்ட லோகோ பைலட் , ரெயிலை நிறுத்தி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story