சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில்.. சாலையில் சறுக்கி சென்று விபத்தில் சிக்கிய ரூ.5 கோடி சொகுசு கார்


சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில்.. சாலையில் சறுக்கி சென்று விபத்தில் சிக்கிய ரூ.5 கோடி சொகுசு கார்
x

மும்பை கடற்கரை சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

மும்பை,

மும்பை நேப்பியன் சீ ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிஷ் ஷா(வயது52). இவர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து கொலபா நோக்கி `லம்போர்கினி' சொகுசு காரில் சென்றார். அப்போது, அங்கு பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. மும்பை கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு மழை நீர் தேங்கிய ரோட்டில் சறுக்கி சென்ற கார், வட்டமடித்தபடி தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. எனினும் ஆதிஷ் ஷா காயமின்றி உயிர் தப்பினார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோட்டில் இருந்து காரை அப்புறப்படுத்தினர். மேலும் காரில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

குறைந்தது ரூ.5 கோடிக்கு விற்பனை செய்யப்படும் `லம்போர்கினி' கார் விபத்தில் சிக்கியது குறித்து ரேமண்டு நிறுவன சேர்மன் கவுதம் சின்கானியா அவரது ‘எக்ஸ்’ பக்கத்தில் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கார் விபத்தில் சிக்கிய வீடியோவை பகிர்ந்து அவர், “மற்றொரு லம்போர்கினி கார் விபத்து இது. இந்த முறை மும்பை கடற்கரை சாலையில் நிகழ்ந்துள்ளது. லம்போர்கினிக்கு என்ன நடக்கிறது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

1 More update

Next Story