உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி


உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
x
தினத்தந்தி 30 Aug 2024 9:58 AM IST (Updated: 30 Aug 2024 12:16 PM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

புதுடெல்லி,

பருவமழை காலங்களில் புயல்கள் உருவாகி மழைப்பொழிவை கொடுக்கும். அந்த வகையில், தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதன்பின்னர் ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களிலும் ஒடிசா மாநிலத்திலும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story