98 நிமிடம் சுதந்திரதின உரையாற்றிய பிரதமர் மோடி


98 நிமிடம் சுதந்திரதின உரையாற்றிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Aug 2024 12:35 PM GMT (Updated: 15 Aug 2024 2:45 PM GMT)

முன்னாள் பிரதமர் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றி இருந்தார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது தேசிய கொடி மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்தநிலையில், டெல்லியில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 98 நிமிடம் (ஒரு மணி 38 நிமிடங்கள்) உரையாற்றினார். மோடி பிரதமரான பிறகு 11 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த ஆண்டுதான் நீண்ட நேரம் சுதந்திர தின உரையாற்றி உள்ளார்.

இதற்கு முன்பு அவர் 2016-ம் ஆண்டு 96 நிமிடங்கள் உரையாற்றி இருந்தார். 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி குறைந்த நிமிடங்கள் 56 நிமிடங்கள் உரையாற்றினார். இந்திய பிரதமர்களில் நீண்ட நேரம் சுதந்திரதின விழா உரையாற்றியது பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றி இருந்தார்.


Next Story