கடந்த 5 ஆண்டுகளில் 730 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை: மாநிலங்களவையில் அரசு தகவல்


கடந்த 5 ஆண்டுகளில் 730 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை: மாநிலங்களவையில் அரசு தகவல்
x

கடந்த 5 ஆண்டுகளில் 47,891 வீரர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.

புதுடெல்லி:

மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பணிச்சூழல் தொடர்பாக மாநிலங்களவையில் முன்வைத்த கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய ஆயுத காவல் படை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த 730 வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர். பல்வேறு சூழ்நிலை காரணமாக 2020-ல் 144 பேர், 2021-ல் 157 பேர், 2022-ல் 138 பேர் , 2023-ல் 157 பேர், 2024-ல் 134 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் 47,891 பேர் முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். 7,664 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

பொதுவாக, மத்திய ஆயுதக் காவல் படைகளில் எட்டு மணி நேர ஷிப்டு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், தேவைகளை பொறுத்து சில சமையம் ஷிப்ட் நேரம் மாறுபடும். ஓய்வு மற்றும் விடுப்புக்கான கால அளவும் உள்ளது. பணிச்சூழல், வசதிகள் மற்றும் வீரர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.


Next Story