உத்தரகாண்ட்டில் கனமழை, நிலச்சரிவு; போக்குவரத்து பாதிப்பு


உத்தரகாண்ட்டில் கனமழை, நிலச்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
x

உத்தரகாண்ட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பத்ரிநாத், ரிஷிகேஷ் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பிரபல சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்தி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நிலச்சரிவால் சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் சரிசெய்து வருகின்றனர்.

1 More update

Next Story